டெல்லி: கைதிகள் விடுதலை தொடர்பான உத்தரவை நிறைவேற்றாவிட்டால் உ.பி. அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோர்ட் உத்தரவை செயல்படுத்தாத உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கைதிகள் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தேர்தல் நடத்தை விதி பாதிக்காது நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத உ.பி. மாநில சிறைத்துறை முதன்மைச் செயலாளருக்கும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.