திண்டிவனம்: உறவினர் முருகானந்தம் கொலை வழக்கில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது முன்விரோதம் காரணமாக சி.வி.சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். முருகானந்தம் கொலை வழக்கு 2011-ல் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் திண்டிவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி முகமது ஃபாரூக் முன்பு சி.வி.சண்முகம், அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் மற்றும் எதிர்தரப்பினர் ஆஜரானார்கள்.