புதுடெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் நேற்று ஆன்லைனில் பதிவு செய்வதற்கும், விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கும் ஒரு புதிய விண்ணப்ப போர்ட்டலை வெளியிட்டது. இனிமேல் அனைத்து விண்ணப்பதாரர்களும் https://upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போர்ட்டலில் விண்ணப்பத்தை நிரப்பி தங்கள் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் என்று யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பழைய ஒரு முறை பதிவு (OTR) தொகுதி இனிமேல் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர்டல், தேர்வர்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், ஆணையத்தால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் கடைசி நேர அவசரத்தைத் தவிர்க்கவும் உதவும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை நிரப்புவதற்கும் ஆவணங்களைப் பதிவேற்றுவதற்கும் வழிகாட்டும் விரிவான வழிமுறைகள் முகப்புப் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையை அடையாள ஆவணமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிடிஎஸ் தேர்வு-II, 2025 மற்றும் என்டிஏ & என்ஏ-II, 2025 ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் புதிய ஆன்லைன் விண்ணப்ப போர்டல் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.