சென்னை: பதிவுத்துறை ஆவணப்பதிவுக்காக இயங்கும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் வழக்கமாக செயல்படும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் வரும் சனியன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.