வேலூர்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இணை சார் பதிவாளர் அலுவலகங்களில் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர்.இதையடுத்து, அங்கு கடந்த 6 மாதமாக நடந்த பதிவுகள் குறித்து தணிக்கை செய்யப்பட்டது.
இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், விஜிலென்ஸ் போலீசாரின் சோதனை எதிரொலியாக நடத்தப்பட்ட விசாரணையில், சார் பதிவாளர் அலுவலங்களில் 90 அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகள் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தணிக்கை அறிக்கை வேலூர் பதிவு மண்டல டிஐஜிக்கு வந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட பதிவாளர் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க டிஐஜி அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, மாவட்ட பதிவாளர் விசாரணை தொடங்கி உள்ளார் என்றனர்.
சார்பதிவாளர் ஆபீசில் அங்கீகாரமற்ற 90 வீட்டுமனை பதிவு அம்பலம்
79