அமராவதி: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆத்மகூர் வனப்பகுதியில் நடத்திய சோதனையில் காரில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற 4 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்களிடம் இருந்து 55 செம்மரக் கட்டைகள், கார், இருசக்கர வாகனத்தை போலீஸ் பறிமுதல் செய்தது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே ரூ.60 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டை பறிமுதல்!!
0
previous post