இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் தேவையை ரூ.2 லட்சம் கோடியாக குறைத்து சர்வதேச நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடுமையான பொருளாதார சிக்கலில் தவிக்கும் பாகிஸ்தான் அரசு, உலகளாவிய கடன் வழங்கும் அமைப்பான சர்வதேச நிதியத்தின் உதவியை நாடி உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் தேவையை 25 பில்லியன் டாலராக (ரூ.2 லட்சம் கோடி) குறைத்து சர்வதேச நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை மாத நிதியத்தின் அறிக்கையில், பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் தேவை 28 பில்லியன் டாலராக (ரூ.2.3 லட்சம் கோடி) இருந்தது.