துபாய்: செங்கடலில் சென்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படுவோர் நடத்திய தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியது. 10 மாதங்களை கடந்து நீடித்து வரும் போரில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்கள் உயிரிழந்து விட்டனர்.
செங்கடலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செல்லும் வணிக கப்பல்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று செங்கடலில் எண்ணெய் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கப்பல் தீப்பற்றி எரிகிறது. இதிலிருந்து மாலுமிகள் 29 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்” என பிரிட்டன் ராணுவ கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளது.