Friday, July 19, 2024
Home » திருவள்ளூர் பாரதிதாசன் நிறைநிலைப் பள்ளியில் எல்கேஜி மாணவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

திருவள்ளூர் பாரதிதாசன் நிறைநிலைப் பள்ளியில் எல்கேஜி மாணவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

by Neethimaan


திருவள்ளூர்: திருவள்ளூர் பாரதிதாசன் நிறைநிலைப் பள்ளியில் எல்கேஜி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதனையடுத்து புதிதாக சேர்ந்த எல்கேஜி மாணவர்களை வரவேற்கும் விதமாக சிவப்பு கம்பள வரவேற்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் மோ.தி.உமாசங்கர் தலைமை தாங்கினார் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முதல்வர் ஜோ.மேரி, தலைமை ஆசிரியர் தே.குமரீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்த்தி, காவேரி ஆகியோர் வரவேற்றனர்.

இந்த விழாவில் சென்னை, போரூர்,  ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் நல மருத்துவரும், திருவள்ளூர் நலன் மருத்துவமனையின் மருத்துவருமான செ.உ.செந்தமிழன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அப்போது அவர் குழந்தைகளின் நலனைப்பற்றியும், பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு தரும் வகையில் பேசினார். மேலும் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து குழந்தைகளுக்கும் விளையாட்டு பொருட்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

9 + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi