சென்னை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரமாகியுள்ளது. பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தையை, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரமாகியுள்ளது. கருத்து மோதலால் ராமதாஸ், அன்புமணியை விமர்சித்து சமூக வலைதளங்களில் ஆதரவாளர்கள் பதிவிட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது.
தலைமையின் அறிவுறுத்தல்படி ராமதாஸ் – அன்புமணியை விமர்சிக்கும் விதமான பதிவுகளை எழுதியோர் அவற்றை நீக்கி வருகின்றனர். சமூக வலைதளங்களில் எழுதப்பட்ட விமர்சனப் பதிவுகளை உடனடியாக நீக்க இருதரப்பிலும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தலால் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனப் பதிவுகளை பாமக ஊடகப் பேரவையினர் நீக்கம் செய்து வருகின்றனர். மருத்துவர் ராமதாசை பின்னணியில் இருந்து சிலர் இயக்குவதாக அன்புமணி ஆதரவாளர்கள் பதிவிட்டிருந்தனர். புதிய நபர்கள் கட்சிக்கு வருவதை அன்புமணி தடுப்பதாக விமர்சித்து ராமதாஸ் ஆதரவாளர்கள் பதிவிட்டிருந்தனர்