நாக்பூர்: பிரதமர் மோடி அரசாங்கத்தின் 11 ஆண்டுகால ஆட்சி குறித்து பேட்டி ஒன்றில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: 11 ஆண்டுகால சிறந்த ஆட்சியை பிரதமர் மோடி வழங்கி உள்ளார். 2029 தேர்தலில் எனக்கு என்ன பணி ஒதுக்கப்படும் என்று தெரியவில்லை. எனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும் நான் அதை சிறப்பாக நிறைவேற்றுவேன். இந்த 11 ஆண்டுகால ஆட்சியில் நீங்கள் பார்த்தது எல்லாம் வெறும் ரீல் தான். 2029 தேர்தலுக்கு பிறகு தான் உண்மையான செயல்பாட்டை பார்ப்பீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த 11 வருசம் பார்த்தது ரீல் தான்… 2029ல் தான் நிஜமான ஆட்டமே தொடங்குது: நிதின் கட்கரி பேட்டி
0