ஐபிஎல் டி20 தொடரில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஆண்டி பிளவர் (55 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே, எசக்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்காக விளையாடி உள்ள பிளவர் (விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்) 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.