தேவையான பொருட்கள்
2 கப் ரவை
8 மேஜை கரண்டி நெய்
1 கப்பால்
1 கப் சர்க்கரை
10 முந்திரிப் பருப்பு
1 மேஜை கரண்டி உலர் திராட்சை
செய்முறை
முதலில் ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி ரவையை நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு மிக்ஸியில் சர்க்கரையை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அதில் வறுத்த ரவையை சேர்த்து சிறிது குறுகுறுப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.நாம் அரைத்த ரவை மற்றும் சர்க்கரை கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டுக் கொண்டு அதில் 4 மேஜைக்கரண்டி நெய் மற்றும் ஒரு கப் பால் சேர்த்து நன்றாக லட்டு பிடிக்கும் பதம் வரும் வரை கலக்கிக் கொள்ளவும். பின்பு லட்டு பிடித்து பரிமாறவும்.