சூரியகாந்தி எண்ணெய்- 100 மில்லி
சீரகம்-2 ஸ்பூன்
மிளகு-1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
பொட்டுக்கடலை- 1 ஸ்பூன்
காரட்-1
கருவேப்பிலை-1 கொத்து
பெருங்காயத்தூள் -1 ஸ்பூன்
வறுத்த ரவை -100 கிராம்
அரிசிமாவு- 200 கிராம்
மைதா மாவு -100 கிராம்
பச்சை மிளகாய்-2 (பொடியாக நறுக்கியது
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையை போட்டு 300 மில்லி தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். நன்றாக ஊறியப்பின் இத்துடன் மைதா மாவு, அரிசிமாவு, பெருங்காயத் தூள், நறுக்கிய பச்சை மிளகாய், முழு மிளகு, சீரகம் மற்றும் சிறிது நீளமாக நைசாக வெட்டிய காரட் துண்டுகள் மேலும் தேவையான உப்பு சேர்த்து நறுக்கிய கருவேப்பிலை பொட்டுக்கடலை போட்டு இத்துடன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி 700 மில்லி தண்ணீர் இன்னும் சேர்த்து நன்றாக கை கொண்டு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் ஒரு தோசைக்கு தேவையான மாவை ஒரு கப்பில் எடுத்து சிறிது சிறிதாக கல் முழுவதும் விரித்து ஊற்றி இரண்டு நிமிடம் வேகவிட்டு திருப்பி போட்டு வேக விடவும். நன்கு பொரிந்து வெந்ததும் எடுத்து தட்டிற்கு மாற்றி விடலாம். சுவையான, அனைவரும் விரும்பி சாப்பிடும் கும்பகோணம் ரவா தோசை தயார்.