சென்னை: 2024-2025ம் ஆண்டிற்கான கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு முன் பண மானியம் ரூ300 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள் பெட்ரோல் பங்க் போன்றவற்றை நடத்தப்படுகின்றன.
இதில், ரேஷன் கடை வாடகை, மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு அரசு சார்பில் வருடந்தோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2024-25-ம் ஆண்டுக்கான முன் பண மானியமாக ரூ300 கோடியை விடுவிக்கப்படுகிறது. இந்த மானியம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, ரேஷன் கடைகளை நடத்தும் ஒவ்வொரு சங்கங்களுக்கும் அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


