புதுடெல்லி: ஐந்து ஆண்டுகளாகியும் சத்தீஸ்கரில் பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு விசாரணையை முடிக்காமல் இருப்பது ஏன் என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு வழங்கிய முன்ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து உத்தரவில், சட்டீஸ்கரில் பொது விநியோகத் திட்ட முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை ஐந்து ஆண்டுகளாகியும் அமலாக்கத்துறை முடிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியதாகும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமினை தவறாக பயன்படுத்துவதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக, அமலாக்கத்துறை இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’’ என்று வழக்கை ஒத்திவைத்தனர்.
ரேஷன் முறைகேடு வழக்கை 5 ஆண்டாக முடிக்காதது ஏன்? ஈடிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
64