தேவையானவை:
துவரம் பருப்பு – 200 கிராம்,
பச்சரிசி – 1 மேஜைக்கரண்டி,
ஜவ்வரிசி – 2 மேஜைக்கரண்டி,
கொத்தமல்லி விதை – 2 மேஜைக்கரண்டி,
மிளகு, சீரகம் – 1 தேக்கரண்டி,
மிளகாய் வற்றல் – 5,
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – 1 ஆர்க்கு,
உப்பு – தேவைக்கு.
செய்முறை:
துவரம் பருப்பு, ஜவ்வரிசி, பச்சரிசி ஆகியவற்றை தனித்தனியே ஊற வைத்து அரைத்து எடுக்கவும். அதில் மிளகாய், மிளகு, சீரகம், தனியாவைச் சேர்த்து அரைத்துக் கலக்கவும். பொடியாக அரிந்த கறிவேப்பிலை, கொத்தமல்லியைச் சேர்த்து கொதிக்கும் நீர் விட்டுப் பிசைந்து, சிறுசிறு வில்லைகளாகத்தட்டி, வெயிலில் உலர்த்தவும். இதை நெய்யில் பொரித்து ரசத்தில் போட ‘கமகம’வென்று வாசனை அருமையாக இருக்கும்.