புளி – எலுமிச்சை அளவு,
தக்காளி – 2,
மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்,
உப்பு – திட்டமாக,
மல்லித் தழை – சிறிது.
நசுக்க:
மிளகு – 1 ஸ்பூன்,
சீரகம் – 1 ஸ்பூன்,
பூண்டு – 6 பல்,
கறிவேப்பிலை – 1 ஆர்க்.
தாளிக்க:
நெய் – 1 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் 1 கப் நீரில் புளி கரைத்து தக்காளியைப் பிசைந்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். புளி பச்சை வாசனை போனதும் நசுக்க கொடுத்தவற்றை நசுக்கிப் போட்டு மேலும் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நுறைத்து வந்ததும் இறக்கிவைத்து நெய்யில் கடுகு தாளித்துப் போட்டு மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். ஈஸியான ரசம் ரெடி.