கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் தனியார் பள்ளியில் 12 வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியை உட்பட 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சி மாஜி நிர்வாகி சிவராமன் தப்பிக்க முயன்ற போது காலில் முறிவு ஏற்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.