தஞ்சை: தஞ்சை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவன் மற்றும் வேல்முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 2 வாரங்களுக்கு முன் நண்பரை நம்பிச் சென்ற இளம்பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில் தற்போது மேலும் இருவர் சிக்கியுள்ளனர்