மதுரை: மன நலம் பாதித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த முருகன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை மதுரை கிளை தள்ளுபடி செய்தது. போக்சோவில் கைதாகி கடந்த மே மாதம் முதல் சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்கவேண்டும் என முருகன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.