லேண்ட் ரோவர் நிறுவனம், ரேஞ்ச் ரோவர் எஸ்வி மசாரா எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 4.4 லிட்டர் டிவின் டர்போ வி8 இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 615 எச்பி பவரையும், 750 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.
டீப் செயின்ட் புளூ நிறத்தில் வெளிவந்துள்ள இந்தக் காரில் ஆடம்பரமான எஸ்வி சூட் பேக்கேஜ் இடம் பெற்றுள்ளது. ஏர் சஸ்பென்ஷன், அடாஸ் தொழில்நுட்பம், பனோரமிக் ரூப், ஹீட், கூல் மற்றும் மசாஜ் வசதி கொண்ட சீட்கள் உட்பட ஏராளமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஸ்பெஷல் எடிஷனில் 12 கார்கள் மட்டுமே வெளியிடப்படும். ஷோரூம் விலை சுமார் ரூ.4.99 கோடி.