Saturday, February 24, 2024
Home » ராஞ்சி இல்லத்திற்கு வருகை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்: கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்..!!

ராஞ்சி இல்லத்திற்கு வருகை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்: கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்..!!

by Kalaivani Saravanan

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் ராஞ்சி இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. நிலமோசடி வழக்கு தொடர்புள்ள சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனிடம் ஜனவரி 20ம் தேதி விசாரணையை தொடங்கியுள்ளனர். பிறகு பல்வேறு கட்டமாக ஹேமந்த் சோரனுக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நாளை பிற்பகல் 1 மணியளவில் தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என ஹேமந்த் சோரன் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியிருந்தார். இருப்பினும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஹேமந்த் சோரனை தொடர்புகொள்ள முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே நேற்று முதல் ஹேமந்த் சோரனை காணவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஹேமந்த் சோரனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 11,000 சன்மானம் கொடுக்கப்படும் என பாஜக தரப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அம்மாநில பாஜக தலைவர் செய்தியாளர்களின் பேட்டியெல்லாம் அளித்திருந்தார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் ராஞ்சி இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். ஹேமந்த் சோரன், கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் மாநில தலைநகரை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கட்சி தொண்டர்கள் அனைவரும் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து பல்வேறு இடங்களில் பேரணி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக ஜார்க்கண்ட் முதல்வர் ராஞ்சியில் உள்ள இல்லத்திலும், ஆளுநர் மாளிகை, அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 7,000க்கும் மேற்பட்ட போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

13 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi