பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் மஸ்ஜிதுன்நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் உள்ளது. இதன் தலைவராக பாரி என்பவர் உள்ளார். செயலாளராக அபுதாகீர், பொருளாளராக ஏ.ஜாகீர் உசேன் ஆகியோர் உள்ளனர். தலைவர் பாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘கடந்த ரம்ஜான் பண்டிகைக்கு பச்சரிசி பெறுவதற்காக திண்டுக்கல் உணவு வழங்கல் துறை அதிகாரியிடம், பெரியகலையம்புத்தூரை சேர்ந்த அதிமுக மேற்கு ஒன்றிய அவை தலைவர் அயூப்கான், தன்னை தலைவராகவும், செயலாளராக ரபீக், பொருளாளராக என்.ஜாகீர் உசேன், துணை செயலாளராக அப்துல் கரீம், துணை தலைவராக தாஜ்தீன் ஆகியோரை கொண்டு போலி லெட்டர் பேடு மற்றும் சீல் தயாரித்து அரிசி பெற்றது தெரியவந்தது. அரசை ஏமாற்றிய 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இம்மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் கிளை, பழநி தாலுகா போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனடிப்படையில் போலீசார் அயூப் கான் உள்பட 5 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரம்ஜான் அரிசிக்கு போலி லெட்டர் பேடு அதிமுக நிர்வாகி மீது வழக்கு
0