Tuesday, February 27, 2024
Home » ராமர் கோயில் கும்பாபிஷேகம் விவகாரம் இங்கு ஒரு கால்… அங்கு ஒரு கால்…: எடப்பாடி மீது துரை வைகோ விமர்சனம்

ராமர் கோயில் கும்பாபிஷேகம் விவகாரம் இங்கு ஒரு கால்… அங்கு ஒரு கால்…: எடப்பாடி மீது துரை வைகோ விமர்சனம்

by Francis

மதுரை: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ மதுரையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜன. 22ல் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விஷயத்தில் எடப்பாடியின் நிலைப்பாடு சரியில்லை. கும்பாபிஷேகத்திற்காக ராமர் கோயிலுக்கு அதிமுகவினரை போக சொல்லியிருக்கக் கூடாது. அவர், இங்கு ஒரு காலும், அங்கு ஒரு காலும் வைத்துள்ளார். எந்த நிகழ்வு நடந்து கோயில் கட்டப்பட்டது என்பதை உலகமே அறியும். கர்நாடக பாஜ எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே, நாடு முழுவதும் உள்ள மசூதிகளை இடித்து கோயில் கட்டும் வரை ஓய மாட்டோம் என தெரிவித்தது கடும் கண்டனத்திற்கு உரியது. இதுபோன்ற மதவாத அரசியல் நாட்டிற்கு ஆகாது.

அனந்தகுமார் ஹெக்டவின் பேச்சு மத அரசியல் செய்வதாக உள்ளது. அன்பே சிவம் தான் இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடு. எந்த ஒரு மதமும் மனிதர்களிடையே வேறுபாடு ஏற்படுத்தி காவு வாங்கி, கோட்பாடு அமைத்து இறைவனை வழிபட வேண்டும் என தெரிவிக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை பொங்கலுக்கு பிறகு துவங்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியில் மதிமுகவின் பங்களிப்பும், செயல்பாடும் சிறப்பாக இருக்கும். தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டணிக்கட்சி தலைமையான முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொகுதிகளை கேட்போம். அவர் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

 

You may also like

Leave a Comment

one × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi