Tuesday, December 5, 2023
Home » ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

by Francis

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 23 மீனவர்கள் நேற்று சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் 14 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து வருவது வழக்கம். இதனிடையே அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்கின்றனர். இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களது மீன்கள் மற்றும் வலைகளை பறித்து சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 23 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்தனர். இதனிடையே, இன்று மீண்டும் 14 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படை கைது செய்த 37 மீனவர்கள் மற்றும் 5 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலிவுறுத்தியுள்ளனர்.

 

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?