ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் காவல் பணியாளர் பணி அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காலை முதலே பக்தர்கள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோயில் பெண் பணியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கோயில் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பிரபாகரன் மீது பாலியல் சீண்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.