ராமேஸ்வரம்: மீன்களுக்கு போதிய விலையை நிர்ணயம் செய்யக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் போராட்டம் காரணமாக துறைமுகத்தில் 700 க்கு மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்திவைத்துள்ளனர். மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, 5,000-க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீன்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
100
previous post