கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். மூவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ல் மீன்பிடிக்கச் சென்று கைதான 8 பேர் மீதான வழக்கில் மன்னார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 8 மீனவர்களில் 5 பேர் முதல்முறையாக இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததால் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். 3 மீனவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை; தலா ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.