Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்களை வீசி விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் காலையில் 420 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று பாக் ஜலசந்தி கடலுக்குச் சென்றன. மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, மூன்று சிறிய ரக ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் திடீரென மீனவர்களின் படகுகளை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் மீன்பிடிக்க விடாமல் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்ததால் அச்சமடைந்த மீனவர்கள் மீன் மடிகளை இழுத்துக் கொண்டு வேறு பகுதிக்கு சென்றனர். சில படகுகளை சிறைபிடிக்கும் நோக்கத்தில் தொடர்ந்து விரட்டிய இலங்கை கடற்படையின் பிடியில் சிக்காமல் இருக்க மீனவர்கள் வலைகளை கடலில் வெட்டி விட்டு தப்பினர். இலங்கை கடற்படை கற்களை வீசி விரட்டியடித்த சம்பவத்தை மீனவர்கள் தங்களின் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேற்று காலை சுமாரான மீன்பாடுகளுடன் கரை திரும்பினர்.