டெல்லி: ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவை எம்.பி அகிலேஷ் பிரசாத் சிங்கின் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளது. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளதால் ரயில் திட்டத்தை கைவிடுமாறு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே ரயில்பாதை அமைக்க ரூ.208.3 கோடி ஆகும் என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்
252