ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 23-ல் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 மீனவர்கள், விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. சிறை காவல் முடிந்து 9 பேரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் 7 பேர் மட்டுமே விடுதலை. 2 படகு ஓட்டிகளுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.