பூந்தமல்லி: ராமாபுரம் குறிஞ்சி பகுதியை சேர்ந்தவர் 32 வயது பெண். இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளன. இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் குளியலறையில் குளித்தபோது, குளியலறை ஜன்னல் வழியாக, அந்த பெண் குளிப்பதை, யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைப்பார்த்த அப்பெண் சத்தம் போட்டபடி வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் மேல்தளத்தில் குடியிருக்கும் மவுரியன் (26) என்பதும், வீடியோ எடுத்தது பற்றி வெளியே யாரிடமாவது சொன்னால், அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து ராமாபுரம் காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் குளிப்பதை செல்போனில் படமெடுத்து மிரட்டிச் சென்ற மவுரியனை தேடி வருகின்றனர்.