மதுரை: ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சாய்வுதளம், மின்தூக்கி அமைக்க நடவடிக்கை கோரிய மனுதாரரின் மனு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.