ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இன்று தொடங்கி அக்டோபர் 15 வரையிலும், அக்டோபர் 25 தொடங்கி 31 வரையிலும் 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.