குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த வழுவூரில் மறைந்த வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் வன்னியர் சங்க நிறுவனருமான மணிகண்டன் அளித்த பேட்டி: பாமகவை வழிநடத்தும் பக்குவம், தலைமை பண்பு அக்கட்சியை உருவாக்கிய ராமதாசுக்கு மட்டுமே உள்ளது. குறுகிய காலத்தில் அன்புமணி, பாமகவை கைப்பற்ற முயல்கிறார். வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ.குரு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டபோது, அவர் வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தடுத்து அவரை மருத்துவ கொலை செய்தவர் அன்புமணி என்பது நிதர்சனமான உண்மை.
இதை ராமதாஸே விரைவில் ஒப்புக்கொள்வார். எனக்கு பாமகவை பிடிக்காது. இருந்தாலும் நான் ராமதாஸை ஆதரிக்கிறேன். ஏனென்றால் அன்புமணிக்கு உழைக்க தெரியாது. ராமதாஸ் உயிருக்கு அன்புமணி அல்லது அன்புமணி மனைவியால் ஆபத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.