சென்னை: ராமதாஸ் உடன் மோதல் முற்றிய நிலையில் அருளை மாற்றக் கோரி அன்புமணி தரப்பு மனு அளிக்க உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அணியாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு குறிப்பிட்ட நிர்வாகிகளை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உத்தரவு பிறப்பித்து வருகிறார். இச்சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பாக பாமகவில் சட்டமன்ற கட்சி கொறடாவாக உள்ள அருள் அன்புமணிக்கு எதிராக ஒரு சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அவர் பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆதரவான நிலைப்பாடை எடுத்திருந்தார். இந்நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு முன்பாக பாமகவில் அருளுக்கு இணைச்செயலாளர் பொறுப்பை நிறுவனர் ராமதாஸ் அளித்திருந்தார். அதனை தொடர்ந்து பாமக சட்டமன்ற கொறடாவாக இருந்த அருளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பாமகவின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது தலைமை செயலகம் வந்துள்ளனர். அவர்கள் சட்டப்பேரவை செயலாளர் மற்றும் பேரவை தலைவரை சந்தித்து பாமக சட்டமன்ற குழு கொறடாவாக உள்ள அருளை அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் தற்போது மனு கொடுக்க உள்ளனர். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ சிவக்குமார் ஆகிய 3 பேரும் அதனுடன் பாமக வழக்கறிஞர் பார் ஆகிய 4 பேறும் பேரவை தலைவரை சந்தித்து மனுவை அளிக்க உள்ளனர். அந்த மனுவில் அவர்கள் பாமக சட்டமன்ற கட்சி கொறடாவாக அருளை நீக்கிவிட்டு சிவகுமாரை அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மனு கொடுக்க உள்ளனர்.