விழுப்புரம்: ராமதாஸும் அன்புமணியும் சந்தித்துப் பேச வேண்டும் என விரும்புகிறேன் என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு நான் காரணம் எனக் கூறுவது அபாண்டமானது. பாமகவை விட்டு நான் விலக உள்ளதாக தவறான தகவல்களை பரப்புகிறார்கள். ராமதாஸ் – அன்புமணி சந்தித்துவிட்டால் பாமக வீறுகொண்டு எழுந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ராமதாஸும் அன்புமணியும் சந்தித்துப் பேச வேண்டும் என விரும்புகிறேன்: ஜி.கே.மணி பேட்டி
0