திருப்பூர், ஏப். 22: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி 3-வது மண்டலம் வார்டு எண் 45-க்கு உட்பட்ட் சி.டி.சி. கார்னர் கபஸ்தான் சாலையில் மக்கள் பயன்பாடு அதிகளவில் இருப்பதாலும், இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. முடிவுற்ற சாலைப்பணிகளை நேற்று மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சாலையை அப்பகுதி மக்களிடம் மேயர் ஒப்படைத்தார்.நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் உசேன், வட்ட செயலாளர்கள் ரபீக், முகமது அலி மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.