நன்றி குங்குமம் டாக்டர்
2007 இல் சிருதா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராம் சரண் தேஜா. இவர், தெலுங்கு திரைப்பட உலகில் மெகாஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். முதல் படமே ராம்சரணுக்கு மெகா ஹிட் கொடுக்க அதன் பின்னர் அவர் வினய விதேய ராமா, சயீரா நரசிம்ம ரெட்டி, மாவீரன், ஆர் ஆர் ஆர் போன்ற பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அவரது திரைப்படங்களில் தற்போது டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார். இன்றைய இந்திய திரையுலகில் இருக்கும் ஃபிட்டஸ்ட் நடிகர்களில் இவரும் ஒருவர். அந்தளவிற்கு அவர் ஒரு ஃபிட்னெஸ் ஃப்ரீக் என்று சொல்லலாம். அவரது ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.
ஒர்க்கவுட்ஸ் திங்கள்
மார்பு பயிற்சியாக 3X10 செட் இன்க்லைன் பெஞ்ச் பிரஸ், 3X10 கேபிள் ப்ளை, 3X50 செட் சிட்- அப்கள், 3X50 செட் ஏபிஎஸ் பிளேட் ட்விஸ்ட், 3X25 செட் பார்பெல் ஃப்ளோர் வைப்பர் மற்றும் இறுதியாக 3X10 செட் டிரிபிள் ஸ்டாப் பெஞ்ச் பிரஸ் செய்வேன்.
செவ்வாய்:
தோள்களுக்கான உடற்பயிற்சியை மேற் கொள்வேன். அதில், 3X12 செட் எல் -லேட்டரல் ரைஸ் மற்றும் 3X10 செட் மிலிட்டரி பிரஸ், 3X10 செட் ஃப்ளோர் ஷோல்டர் பிரஸ் 3X10 அர்னால்ட் பிரஸ், 3X15 செட் பல்ஸ் அப்கள், 3X10 செட் கத்திரிக்கோல் உதைகள்.
புதன்
முதுகு மற்றும் பைசெப்ஸ் பயிற்சிகள் இதற்காக, 3X10 செட் ஷ்ரக்ஸ், , 3X10 செட் வளைந்த வரிசை, 3X12 செட் சின் அப்கள், 3X10 செட் வைட் கிரப் லேட் புல் டவுன்கள், 3X10 செட் நிமிர்ந்த வரிசைகள் மற்றும் 3X12 செட் சுத்தியல் கர்ல்ஸ் மற்றும் 3 செட் கர்ல்ஸ்.
வியாழன்
மீண்டும் மார்பு மற்றும் முதுகுக்கான பயிற்சிகள். அதில், 3X50 செட் புஷ்-அப்களுடன் 3X10 சாய்ந்த பிரெஞ்ச் பிரஸ், 3X12 செட் கிளோஸ் கிரிப் புஷ் – அப்கள், 3X50 செட் பிளேட் டிவிஸ்ட், 3X25 செட் பார்பெல் ஃப்ளோர் வைப்பர்கள், 3X10 செட் டிரிபிள் ஸ்டாப் பிரெஞ்ச் பிரஸ், 3X12 செட் துறவற வரிசையின் செட் மற்றும் 2X10 செட் புல்-அப்கள்.
வெள்ளி
கைகள் மற்றும் கால்களுக்கான பயிற்சிகள். அதில், 3X10 செட் குந்துகைகள், 3X10 செட் பார்பெல் லுஞ்ச், 3X10 செட் ரோப் ட்ரைசெப் புஷ்டவுன், 3X10 செட் டெட்லிஃப்ட்ஸ், 3X10 செட் கிராஸ் ஓவர் லுன்ஸ் மற்றும் 3 செட் 21 செட்கள் என வாரம் முழுவதுமே எனது பயிற்சிகள் இருக்கும்.
டயட்
நான் எந்தளவிற்கு கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறேனோ அதே அளவு கடுமையான உணவு முறைகளையும் பின்பற்றுகிறேன். மேலும், என் மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா உணவு பயிற்சியாளர் என்பதால், எனது டயட் விஷயங்களை அவரே பார்த்துக் கொள்கிறார். அதிலும் குறிப்பாக, டயட் விஷயத்தில் நான் முக்கியமாக கடைபிடிப்பது, வீட்டில் சமைத்த உணவை மட்டுமே எடுத்துக் கொள்வேன். சூட்டிங் சமயத்திலும் வீட்டிலிருந்து உணவு வந்துவிடும். பெரும்பாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் மட்டுமே வெளி உணவுகளை சாப்பிடுவேன்.
எனது உணவுமுறை என்று எடுத்துக் கொண்டால், காலை உணவாக, 2 முழு முட்டைகள், 3 முட்டையின் வெள்ளைக்கரு, 1 டம்ளர் பாதாம் பால் மற்றும் அரை கப் ஓட்ஸ் சாப்பிடுவேன். அதன்பிறகு 11:30 மணிக்கு, ஒரு கோப்பை காய்கறி சூப் மற்றும் சில துண்டுகள் க்ரூட்டன்ஸ் எடுத்துக் கொள்வேன். அதன்பிறகு காலை சிற்றுண்டி சாப்பிடுவேன். மதிய உணவின் போது, 200 கிராம் கோழி ஈரல் இருக்கும். இது தவிர, அரை கப் பச்சை காய்கறிகள் மற்றும் அரை கப் பிரவுன் ரைஸ் சாப்பாடு. மாலை சிற்றுண்டியாக அரை கப் காய்கறி சாலட் மற்றும் 200 கிராம் அளவில் ஸ்வீட் பொட்டேடோ இருக்கும்.
இரவு உணவின்போது, ஒரு கிண்ணம் பருப்புகள், சாலட் வகைகள் மற்றும் வெண்ணெய் பழம் இருக்கும். அதுபோல் எனது இரவு உணவை மாலை 6 – 7க்குள் முடித்துவிடுவேன். அதன்பிறகு எதற்காகவும் எதையும் சாப்பிட மாட்டேன். இந்த உடற்பயிற்சிகளும் உணவுமுறையும்தான் என்னை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்