சண்டிகர்: சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவர் பிக்ரம்சிங் மஜிதியா சொத்து குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது 7 நாள் நீதிமன்ற காவல் நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து, அவரை மொகாலியில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர்.இதனால் மொகாலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மஜிதியாவுக்கு ஆதரவாக, முன்னாள் துணை முதல்வரும் அகாலி தள தலைவருமான சுக்பீர்சிங் பாதல் தலைமையில் நேற்று அந்த கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்ட நீதிமன்றத்திற்கு பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது சுக்பீர்சிங் பாதல் மற்றும் கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர். அதே போல் அமிர்தசரஸ்,பாட்டியலா உள்ளிட்ட பல நகரங்களில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற அகாலிதள தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.