டெல்லி : ரக்ஷா பந்தன் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டத்தை கொண்டுவரட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான
அன்பின் அடையாளமான பண்டிகை என மோடி பதிவிட்டுள்ளார். அதே போல், பெண்களின் பாதுகாப்பை, மரியாதையை உறுதி செய்ய நாட்டு மக்கள் உறுதி மொழி எடுக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.