ராய்பூர்: ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய 2 சகோதரிகளை 10 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக நிர்வாகியின் மகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூரை சேர்ந்த இரண்டு இரண்டு சகோதரிகள், ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று, இரு சகோதரிகளையும் கடத்தி சென்றது.
பின்னர் அவர்களை மறைவான இடத்தில் வைத்து 10 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. பின்னர் இரு சகோதரிகளையும் அப்படியே விட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பியது. பாதிக்கப்பட்ட இரு சகோதரிகளும், தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் ெதரிவித்தனர். அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்:
இரண்டு சகோதரிகளை 3 பேர் கும்பல் வழிமறித்தது. சகோதரிகளிடம் இருந்த பணம் மற்றும் மொபைல் போனை பறித்துக் கொண்டனர். அதேநேரம் நான்கு பைக்கில் 7 பேர் கும்பல் அங்கு வந்தது. இவர்கள் அனைவரும், இரு சகோதரிகளையும் வலுக்கட்டாயமாக தங்களது பைக்கில் ஏற்றிக் கடத்திச் ெசன்றனர். இரு சகோதரிகளையும் பிரதான சாலைக்கு ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று, 10 பேரும் அவர்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இவ்வழக்கில் உள்ளூர் பாஜக தலைவர் லக்ஷ்மி நாராயண் சிங்கின் மகன் பூனம் தாக்கூர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டு பலாத்கார வழக்கின் மூளையாக செயல்பட்டவர் பூனம் தாக்கூர் என்று கூறப்படுகிறது. அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. பாதிக்கப்பட்ட இரு சகோதரிகளும் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்’ என்றனர்.