ஆக.26, 27-ல் 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த 10 பேர், தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வாகினர். 10 பேர் மக்களவைக்கு தேர்வான நிலையில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. 2 பேர் ராஜினாமா செய்த நிலையில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.