Sunday, April 21, 2024
Home » மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த விவகாரம்; இமாச்சலில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு சதியை முறியடித்த சபாநாயகர்

மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த விவகாரம்; இமாச்சலில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு சதியை முறியடித்த சபாநாயகர்

by Suresh

சிம்லா: இமாச்சலில் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் ெசய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு சதியை முறியடிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரேயொரு தொகுதிக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள் இருந்ததால், அக்கட்சியின் வேட்பாளர் எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால், 25 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருதல் தொடர்பாக, நேற்று ஆளுநரை பாஜக எம்பிக்கள் சந்தித்தனர்.

அதேநேரம் சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டம் நடைபெறுவதால், நேற்றை கூட்டத்தின் போது பாஜக எம்எல்ஏக்கள் 15 பேர் சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா முன்பாக விதிமுறை மீறி நடந்து கொண்டதால், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்களை அரியானா மாநிலத்திற்கு பாஜக கடத்தி சென்றுள்ளதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றம்சாட்டினார். நேற்றைய அரசியல் பரபரப்பு இவ்வாறு சென்று கொண்டிருந்த போது, அமைச்சரவையில் இருந்து தான் விலகுவதாக அமைச்சர் விக்ரமாதித்யா சிங் அறிவித்தார்.

இதனால் இமாச்சல பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. ஆட்சியை காப்பாற்ற வேண்டி காங்கிரஸ் தலைமை அதிரடி முடிவை எடுத்தது. தங்களது கட்சி எம்எல்ஏக்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டி, மேலிட தலைவர்களையும் இமாச்சலுக்கு அனுப்பி வைத்தது.

கர்நாடக மாநில துணை முதல்வரும், காங்கிரஸ் முக்கிய தலைவருமான டி.கே.சிவகுமார் போன்ற தலைவர்கள், முதல்வர் மீதான அதிருப்தி குறித்தும், ஆட்சியை தக்கவைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். இன்று மாலை காங்கிரஸ் எம்எல்ஏக்களுடான ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இந்நிலையில் சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா இன்று அளித்த பேட்டியில், ‘மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரை தகுதி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதுகுறித்து விசாரணை நடைபெற்றது. 6 எம்எல்ஏக்களும் தனியாக மனு அளித்திருக்கிறார்கள். அதுகுறித்தும் விசாரிக்கப்பட்டது.

பேரவை தேர்தலில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ஆறு எம்எல்ஏக்களும் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். எனவே அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 6 பேரும் இமாச்சல பிரதேச சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்’ என்றார்.

சபாநாயகரின் அதிரடி முடிவால், காங்கிரசின் பலம் 34 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்ைம பலத்திற்கு 35 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

எப்படியாகிலும் நம்பிக்கை தீர்மானத்தை காங்கிரஸ் அரசு எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியை காங்கிரஸ் வெற்றிகரமாக கையாண்டதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

nineteen + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi