புதுடெல்லி: தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அசாம்(2), பீகார்(2), அரியானா (1), மத்தியப்பிரதேசம் (1), மகாராஷ்டிரா(2), ராஜஸ்தான் (1), திரிபுரா(1), தெலுங்கானா (1) மற்றும் ஒடிசா(1) ஆகிய 9 மாநிலங்களில் 12 மாநிலங்களை இடங்கள் காலியாக உள்ளன. இந்த 12 இடங்களுக்கு செப்டம்பர் 3ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கி 21ம் தேதியுடன் நிறைவடைகிறது. செப்டம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.