சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றுள்ளது. இந்த தேர்தல் வேட்புமனுவில் மொத்தம் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 4, அதிமுக சார்பில் 2, சுயேட்சைகள் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. உரிய எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்கப்படும் என கூறப்படுகிறது.
மாநிலங்களவை தேர்தலில் கமல் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மநீம தலைவர் கமல்ஹாசன், திமுகவின் வில்சன், சல்மா சிவலிங்கம், அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்துள்ள இன்பதுரை, தனபாலு போட்டியின்றித் தேர்வாகின்றனர்