டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மாநிலங்களவை தொடங்கும் என தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதம் நடத்த அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கை விடுத்துள்ளார்.