மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியின் வீர் பூமி பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.