சென்னை: ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலி பேஸ்புக் முகவரி ஏற்படுத்தி ரூ.2 கோடி பணமோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் ஏற்கனவே அறக்கட்டளையில் இருக்கும் நிலையில் போலியாக ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் மீண்டும் கணக்கு துவங்கி பணம் மோசடி செய்வதாக சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் ஏற்கனவே அறக்கட்டளையில் இருக்கும் நிலையில் போலியாக ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் மீண்டும் துவங்கி பணம் மோசடி செய்வதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலாளராக இருக்கக்கூடிய சிவராமன் கிருஷ்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். குறிப்பாக அதில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு இந்த பவுண்டேஷன் ஆனது உதவி செய்யக்கூடிய நிலையில் போலியாக கணக்கு ஒன்றினை தொடங்கி 200 நபர்களிடம் பல லட்சம் ரூபாய்கள் பணம் மோசடி செய்து குலுக்கல் முறையில் திருப்பி வழங்கப்படும் என்ற அடிப்படையில் பணம் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே இது தொடர்பாக ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கூடிய வகையில் அவர்கள் ஈடுபட்டதாகவும், இரண்டு தொலைபேசியை மையமாக வைத்து புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது புகார் அளிக்கப்பட்டு இருக்கக் கூடிய நிலையில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் சார்பாக இந்த பவுண்டேஷன் உடைய மேலாளராக இருக்கக்கூடிய சிவராம கிருஷ்ணன் புகாரினை அளித்திருக்கிறார்.புகாரை பெற்றுக்கொண்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.